அம்பை சிகண்டி
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது. தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வைப் பாதித்தது. அவள்தான் அம்பை.
விரும்பியபோது மரணம் என்று தமது தந்தையிடம் வரம்பெற்றிருந்த பீஷ்மரின் முடிவு, அரியணைப் போட்டிக்காக எழுந்த போரில் இந்த அம்பையின் நிமித்தமாகவே நேரிட்டது. மஹாபாரதத்தில் பல பர்வங்களினூடே ஆங்காங்கு சிதறல்களாகக் கிடக்கும் அம்பையின் கதை இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
யாரிந்த அம்பை? அவள் எவ்வாறு பீஷ்மரால் பாதிக்கப்பட்டாள்? அவளால் பீஷ்மரைப் பழிதீர்த்துக்கொள்ள முடிந்ததா? சிகண்டியாக வந்த அம்பையைப் பற்றி மஹாபாரதத்தில் உள்ளபடியே அறிய உதவும் நூல் இது.
Reviews
There are no reviews yet.