,

ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா

290

Availability: 3 in stock

ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா

ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா’ என்ற வித்தியாசமான தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகம், இதன் உள்ளடக்கத்திலும் வித்தியாசமான ஒன்றே. தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். ஆண்மை என்ற சொல்லும் பெண்மை என்ற சொல்லும் இன்று பொருளை இழந்து நிற்கின்றன. இன்றைய உலகில் பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு எதைச் சொல்லித் தருவது, எப்படிச் சொல்லித் தருவது என்பது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டிய ஆசிரியர்களோ குழம்பிப் போய் நிற்கிறார்கள். தாங்கள் நம்பும் வாழ்க்கைக் கோட்பாடுகளைத் தங்கள் பிள்ளைகளிடம் புகுத்துவதா அல்லது இன்றைய நவீனக் கோட்பாடுகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதா என்ற கேள்விக்கு இன்று யாரிடமும் பதிலில்லை. இந்நிலையில் இப்புத்தகம் பதின்ம வயதுச் சிறுவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கம் போல விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. வெற்று அறிவுரைகளை வீசிச் செல்லாமல், இன்றையப் பிரச்சினைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, அந்தத் தீர்வுகள் இன்றைய நிலையில் எப்படிச் சாத்தியம் என்பதை நிகழ்கால நிகழ்வுகளோடு விளக்கி இருக்கிறார் நியாண்டர் செல்வன். அதற்காக நம் மரபு சார்ந்த கோட்பாடுகளை அப்படியே தூக்கி வீசி விட வேண்டியதில்லை என்பதையும் பல வரலாற்றுக் கால உதாரணங்களின் மூலம் விளக்குகிறார். சுருக்கமாகச் சொன்னால் இந்த நூல் உங்களுக்கும் உங்கள் அடுத்த சந்ததிக்கும் ஒரு பொக்கிஷம். ஆண்மை மிக்க ஆண்களையும் பெண்மை மிக்க பெண்களையும் வளர்க்க இதைவிடச் சிறந்த வழிகாட்டி நூல் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா”
Shopping Cart