சோழ எல்லை | சோழச் சூரியன் பாகம்-2
அரசர் கால வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது, இரண்டு பெரும் வீரர்கள் சந்தித்துக் கொள்வதும் மோதிக் கொள்வதும். ஆதித்த கரிகாலனும் வீரபாண்டியனும் வரலாற்றில் இரு முக்கியமான வீரர்கள். இந்த இருவருக்குமான மோதலையும் அதற்கு முன்னான கற்பனைச் சந்திப்புகளையும் ஒட்டி இந்த நாவலை எழுதி இருக்கிறார் சிரா.
மிக மெல்லிய ஒரு வரலாற்றுக் குறிப்பை எடுத்துக்கொண்டு, அந்த மையப் புள்ளியை நோக்கி வந்து வெளியேறும் பல்வேறு காலக்கோடுகளை வரைந்து, மாபெரும் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் நூலாசிரியர். அதில் முக்கியமானது, ஆதித்த கரிகாலனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையேயான நட்பு. ஒரு வரலாற்று நாவலில் துணைக் கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் மீண்டும் இந்த நாவலில் கண்டுகொள்ளலாம். சுவாரஸ்யமான சம்பவங்கள், நிறைவான உரையாடல்கள், ஆற்றொழுக்கான நடை என்று இந்த வரலாற்று நாவல் உங்களைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை
Reviews
There are no reviews yet.