பொருள்நிலை கடந்த பரிமாணம்
“உடல்தன்மைக்கு அப்பாற்பட்ட பரிமாணத்திற்கு, எல்லையற்று ஆகவேண்டும் என்னும் உந்துதலுக்கு, மனிதன் உடல் தன்மையிலான வெளிப்பாட்டையே பதிலாகக் கொடுக்க நினைக்கிறான். இது அவனை முழுமையாகத் தேடி எல்லாவிதமான செயல்களையும் தொடர்ந்து செய்யவைக்கிறது.”
“நீங்கள் யார் என்பதைவிடவும், சற்று அதிகமாக இருக்கவே எப்போதும் விரும்புகிறீர்கள். உங்களுக்குள் ஏற்படும் இந்த உந்துதல் முடிவுறாத ஒன்று. ஆனால், இந்த உந்துதல் சற்றே அதிகத்தைத் தேடியல்ல, உச்சபட்ச விரிவடைவதலை நோக்கி.”
“இயற்கை மனிதனின் புத்திசாலித்தனத்தை மதித்தது. சுரப்புகளுக்கும் அப்பால் மனிதனின் புத்திசாலித்தனம் செயல்படும் என்று நம்பியது. ஆனால் 90 சதவீத மனிதர்கள் இயற்கையை ஏமாற்றிவிட்டார்கள். படைத்தவனை ஏமாற்றிவிட்டார்கள். ஏனெனில் சுரப்புகளுக்கும் அப்பால் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனத்தைவிட சுரப்பிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.”
Reviews
There are no reviews yet.