மனித சக்தி மகத்தாக சக்தி
மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் ஒரெ எழுத்துதான் வேற்றுமை. மனித சக்தியின் மகத்துவத்தை பல்வேறு கோணங்களில் சத்குரு விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் மகத்தான ஆற்றலை அடையாளம் காணவும், அதனைப் பெருக்கி பொருளுள்ள வாழ்க்கை வாழவும் தன் பெரும் கருணையின் வெளிச்சத்தில் சத்குரு வழிகாட்டுகிறார். எது இயல்பு என்றும் எது வாழ்க்கை என்றும் தெளிவுபடுத்துகிறார்.
• புதிராய் தெரிந்த வாழ்க்கை புரியத் தொடங்குகிறது. இருளில் இருந்த இதயம் புலரத் தொடங்குகிறது. பாதை துலங்குகிறது. பயணம் நிகழ்கிறது.
• ஒவ்வொரு மனிதனும் தன் ஆற்றலை அறிந்து கொள்ளாமலேயே வாழுகிற வாழ்க்கை பயனற்றது. தனக்குள் இருக்கும் இமாலய சக்தியை அறிந்து கொண்ட பிறகு வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. உணவு, உணர்வு, சோதனைகளை எதிர்கொள்ளுதல், சுயமறிதல் என்று என்று ஏராளமான அம்சங்களை இந்த நூலில் சத்குரு விவரிக்கிறார்.
• மகத்தான வாழ்க்கைக்கான உந்துதல் இல்லாத மனிதர் யாருமில்லை. அதற்கான வழி சொல்லும் வரைபடமாய் விரிகிறது இந்த புத்தகம்.
Reviews
There are no reviews yet.