மூளையின் அற்புத ஆற்றலை அறிந்துகொள்வோம்!
நினைவு ஆற்றலுக்கு தேவை பயிற்சியும், முயற்சியும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். மூளையின் அற்புத திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. எல்லாம் வல்ல மனம், அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனம், மனம் ஒரு மென்பொருள், நினைவுத் திறனை மேம்படுத்தும் வழிகள், மனதை ஒருமுகப்படுத்துவதில் லேசரின் தத்துவம் என்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
நினைவாற்றல் குறைவு என்ற நிலை எவருக்கும் இல்லை என நம்பிக்கையூட்டுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும் நடைமுறைகளை தருகிறது. மாணவ – மாணவியருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ள நுால்.
Reviews
There are no reviews yet.