தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்பொழுது நெய்வேலியில் வசித்து வரும் நெய்வேலி பாரதிக்குமார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் துணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
சிறுகதை கவிதை கட்டுரை பிற மொழி திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தின் பல்வேறு பரிமாணங்களில் இயங்கிவரும் இவர் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார் இவர் வசனம் எழுதிய மன்னார்வளைகுடா திரைப்படமும் அடங்கும் ஒரு ஆவணப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவரது சிறுகதை பொதிகை தொலைக்காட்சியில் நாடகம் ஆக்கப்பட்டுள்ளது.
சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு கவிதைத் தொகுப்புகள் எடிசனின் வாழ்க்கை வரலாறு
பழம் பெருமை பேசுவோம் என்கின்ற கட்டுரை தொகுப்பு ஆகிய ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை தோறும் வெளிவரும் முத்துச்சரம் பகுதியில் தொடராக வெளிவந்த அதிசயங்களின் ரகசியங்கள் சுவாரசியமான பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
தொடராக வந்ததைக் காட்டிலும் இன்னும் பல புதிய செய்திகளையும் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை இன்னும் விரிவாக்கி அழகுற இணைத்தும் வண்ணப்படங்களுடன் நூலாக வெளிவந்துள்ளது.
அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.
பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப நாளும் புதிய செய்திகளை தேடி அலைபவர்களுக்கு வரலாற்றின் மீது தீராத தாகம் கொண்டவர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.
Reviews
There are no reviews yet.