அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

270

அ.மார்க்ஸின் தற்போது அச்சில் இல்லாத மிக முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்து பத்து தொகுப்புகள் உடனடியாகக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் வரும் முதல் தொகுப்பு இது. இதுவரை வெளிவராத புதிய கட்டுரைகளும் இவற்றில் உண்டு. இரு உலகப் போர்களைச் சந்தித்ததும், பல முக்கிய நிகழ்வுகளுடன் கூடியதுமான இருபதாம் நூற்றாண்டு குறித்த விரிவான கட்டுரையுடன் தொடங்கும் இந்நூல் பவுத்தம் குறித்துப் புதிய கோணத்தில் அணுகும் மூன்று கட்டுரைகளை உள்ளடக்குகிறது. ப்ரமிள், இடாலோ கால்வினோ ஆகியோரின் மரபு மீறிய எழுத்து முறைகளை இரு கட்டுரைகள் நுணுக்கமாக அறிமுகம் செய்கின்றன. தேவதாசிமுறை குறித்த இரு கட்டுரைகள், இராகவையங்காரின் ‘ஆத்திச்சூடி’, முதலியன இவற்றைப் புதிய கோணங்களில் அணுகுபவை. இராமாயண நிகழ்வுகள் அனைத்தும் விந்திய & சாத்புரா மலைகளைத் தாண்டியதில்லை, லங்கா என்பது இலங்கை அல்ல எனும் பரமேசுவர அய்யரின் கட்டுரை ஆதாரபூர்வமாக அறிவியல் அடிப்படையில் இதை நிறுவுகிறது. கி.ராவின் பாலியல் கதைகளை பக்தின் முதலானோரின் கோட்பாடுகளின் ஊடாக மிக விரிவாக ஆய்வு செய்கிறது ஒரு கட்டுரை. இப்படி வழமையான பார்வைகளை மிக நுணுக்கமாக விமர்சித்துப் புதிய கோணங்களில் அணுகும் 16 முக்கிய கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்”
Shopping Cart