,

பாலக்காடு அய்யர் சமையல் – Palakkadu Iyyer

220

பாலக்காடு அய்யர் சமையல் – Palakkadu Iyyer

புதிதாகத் திருமணமாகி, திடீரென்று சமையலறையில் நுழையும் ஜோடிகளுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்ரசாதம்!

ஒன்றை நூறாக்கும் சமையல் வித்தை பாலக்காடு சமையலுக்கே உரித்தானது.. பலாவை வைத்து பலநூறு உணவு வகைகள் பாலக்காடு சமையலில் உள்ளன.

பாலக்காடு சமையலின் பல தினுசுகளை இந்நூலில் நீங்கள் படிக்கலாம், சமைத்து சுவைக்கலாம்.

சமையல் குறிப்புகள் மட்டுமல்லாமல் பாலக்காடு மற்றும் கேரளத்தின் கலாசாரம், பாரம்பரியம், சரித்திரம், தெய்வ வழிபாடு, பழக்க வழக்கங்கள், நதிக்கரை நாகரிகம், அக்ரஹாரங்கள் போன்றவற்றைப் பற்றிய சுவையான குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கின்றன.

பாலக்காடில் ஒவ்வொருவர் வீட்டின் பின்னாலும், தோட்டத்தில் மா, பலா, வாழை, தென்னை, பப்பாளி, பூசணி, கீரை வகைகள், என்று அன்றாட சமையலுக்கான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் காய்கறிகளைக் கொண்டே தினந்தோறும் சமையல் செய்கிறார்கள்.

பாரம்பரிய வழக்கம், சம்பிரதாயத் தயாரிப்பு என்ற தொன்மை மணம் மாறாமலும், இன்றைய தலைமுறையினரின் நாக்கு ருசிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன உத்திகளைக் கையாண்டும் பாலக்காடு உணவு வகைகளைத் தயாரிக்கும் மந்திரச் சமையல் குறிப்புகளை அமைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் நாகலக்ஷ்மி முத்துஸ்வாமி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாலக்காடு அய்யர் சமையல் – Palakkadu Iyyer”
Shopping Cart