மணிப்பூர் கலவரமும் பின்னணியும்
மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. அங்கே நடக்கும் கலவரங்களுக்கு மேம்போக்கான காரணங்களை ஊடகங்கள் எழுதி வருகின்றன. காரணம், மணிப்பூர் மற்றும் அதன் வரலாற்றைப் பற்றிய புரிதலின்மை. உண்மையில் மணிப்பூரின் கலவரங்களுக்குக் காரணம் ஒன்றல்ல, பல. மணிப்பூர் ஒரு சொர்க்க பூமியாக இருந்து, அங்கே திடீரென்று கலவரம் ஓர்இரவில் ஆரம்பித்துவிடவில்லை.
மணிப்பூரில் நடக்கும் கலவரம் இனச் சண்டையா? எல்லோரும் சொல்வது போல் மதச் சண்டையா? பழங்குடிச் சமூகக் குழுக்களுக்கு இடையேயான மோதலா? இதில் இந்தியாவின் பங்கு என்ன? மணிப்பூர் எல்லை நாடுகளின் பங்கு என்ன? மணிப்பூரின் வரலாற்றின் பங்கு என்ன? போதைப்பொருள் மாஃபியாக்களின் பங்கு என்ன? இந்த அத்தனை கேள்விகளுக்கும் விரிவாகவும் ஆழமாகவும் விடையளிக்கிறது இந்தப் புத்தகம். அரிதான நூல்களை ஆதாரத்தோடு எழுதி வரும் விதூஷ் இந்த நூலையும் ஆதாரத்துடன் எழுதி உள்ளார். மணிப்பூர் பற்றி இத்தனை ஆழமான, விரிவான ஒரு நூல் தமிழில் வந்ததில்லை
Reviews
There are no reviews yet.