நபியிடம் கேள்வி? அல்லாஹ்வின் பதில்! -பன்னூலாசிரியர் ஹர்ஃபுன் மில்லத்
அ.க.அப்துஸ் ஸலாம் ஸுபைர் ஸய்யிதி
எனது ஆன்மீகத் தந்தையும், ஆசிரியப் பெருந்தகையும், தமிழ் மாநில ஐமாத்துல் உலமா சபையின் நிறுவனரும், ரஹ்மத் மாத இதழின் நிறுவனருமான ரஹ்மத்துல் மில்ஸத் மவ்லானா அல்ஹாஜ் B.A. கலீலூர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் அவர்களின் இளைய புதல்வர்தான் பன்னூலாசிரியர். அ.க.அப்துஸ்ஸலாம் ஸுபைர் எஸய்யிதி அவர்கள் ஆவார்கள்.
நூலாசிரியர் அ.க.அ. ஸுபைர் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக, சமூகத்தில் நடக்கும் தீமைகள் கண்டு சமூகத்திற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டு கொதித்தெழுந்து ஆக்கப்பூர்வமான முறையில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பதினேழு வயதினில் துவங்கிய இவரின் எழுத்துப்பணி கால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவரின் எழுத்தின் தாக்கத்தினால் சமூகத்தில் பல்வேறு நற்பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது
Reviews
There are no reviews yet.