வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம் : செ.செந்தில்குமார்
இந்தியாவின் நம்பர் 1 மாலை நாளிதழான சென்னை மாலைமலரில் பொறுப்பாசிரியராக பணிபுரிந்து வருகிறார் பத்திரிக்கை துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் நியூஸ் இதழில் ஏராளமான கதைகள் கட்டுரைகள் எழுதியுள்ளார்
ராணி வார இதழ் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த போது வேலூர் சிறையில் உள்ள பெண் கொலையாளிகள் பற்றி ஆய்வு செய்து பெண்களின் உண்மை கதையை தொடராக எழுதினார் அமானுஷ்யம் தொடர்பான ஆவியே நில் கொல் என்ற ஒரு தொடர் எழுதியுள்ளார் கொல்லிமலைக் குள்ளன் என்ற சிறுவர் கதைகள் சிந்து என்னும் புனைபெயரில படைத்துள்ளார்
மாலைமலர் தேன்மலர் இல் உலகை உலுக்கிய கொலைகள் ஆவி சொன்ன பதில்கள் தொடர்கள் எழுதியுள்ளார் மாலை மலரில் எழுதிய ஆலய வழிபாடு ஏன் எதற்கு எப்படி என்ற தொடர் தினத்தந்தி பதிப்பகத்தில் நூலாக வெளிவந்துள்ளது ராணி வார இதழில் வெளிச்சத்துக்கு வரும் சித்தர்கள் என்னும் தொடர் எழுதியுள்ளார்
தற்போது மாலைமலரில் அதிசயங்கள் நிறைந்த திருவண்ணாமலை என்னும் தொடர் எழுதி வருகிறார்
Reviews
There are no reviews yet.