,

வாழ்வை வளமாக்கும் விரத முறைகள்

180

விரதங்கள் புஜைகள் பற்றிய தகவல் அடங்கிய நூல்

Availability: 2 in stock

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள் செந்தூர் திருமாலன்

ஒவ்வொரு பூஜைக்கும் விரதத்திற்கும் தனி மகிமை உண்டு எந்த பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விரும்பியது நிறைவேறும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் பூஜைகள் விரதங்கள் அவற்றைப் பற்றிய புராண சாஸ்திர விளக்கம் விரத முறைகள் மற்றும் விரத பலன்கள் காயத்ரி மந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள் என்ற தலைப்பில் செந்தில் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார்
திருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலன் இயற்பெயர் எஸ் நாராயணன் தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர் சித்தானந்த சுவாமிகள் வரலாறு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி மயிலம் முருகன் கோவில் வில்லியனூர் மாதா வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் வரலாறு உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்கள் எழுதியுள்ளார்
சமீபத்தில் செந்தூர் திரு மாலன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட 27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள் புத்தகம் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று குறுகிய காலத்தில் பல பதிப்புகளைக் கண்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது இந்த நூல் எழுத சிவாச்சாரியார்கள் ஓலைச் சுவடிகள் மற்றும் சில பட்டாச்சாரியார்கள் நேர்காணல் களப்பணிகள் மேற்கொண்டு பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள் நூலைப் படித்துவிட்டு வேலூர் பொற்கோவில் நிறுவனர் அருட்திரு சக்தி அம்மா விரதங்கள் குறித்து பல உண்மைகளையும் புராண சாஸ்திர விளக்கங்களையும் விரகத்தின் முறைகளையும் மற்றும் அதன் பலன்களையும் பூஜைகள் பற்றியும் முழுமையான தகவல்களுடன் பூஜை அகராதி போல் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது இன்னுள் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞானப் பொக்கிஷம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழ்வை வளமாக்கும் விரத முறைகள்”
Shopping Cart