,

Therimanal – தேரிமணல்

220

Therimanal –  (தேரிமணல்)

Therimanal –  தேரிமணல்

மண்டைக்காட்டுக் கோயில் (1982) விழாவை ஒட்டி ஏற்பட்ட கலவரம் எப்படி உருவாகி, பரவி, சாதி, மத, ஊர்க் கலவரங்களாக விசுவரூபம் எடுக்கிறது என்பதை இந்த நாவல் அருமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளது. ஊர்களுக்கிடையேயான கலவரம் பகையாக மாறுகிறது. அதன் விளைவு ஒரே மதம் – கத்தோலிக்கக் கிறித்தவ சமயம் சார்ந்த காதலர்களை (விக்டர் – விக்டோரியா) மணம் செய்து கொண்டபின், விக்டரின் ஊரான தாமரைக்குளத்தில் வாழ, ஊர்க்காரர்கள் எதிர்க்கின்றனர். அடிப்படையில் இரு ஊர்க்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர். ஆயினும் பகை, கண்ணை மறைக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் இவர்கள். அனேகமாக அனைவருமே உழைத்துப் பிழைப்பவர்கள். நாளைய பொழுதுக்கு உணவிற்கு உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ளவர்கள், சாதி சமயம் காரணமாகப் பகைத்துக் கொண்டு ஊர்களுக்கிடையே பகையாக மாறுவதை, நாவல் மிக அருமையாகப் படம்பிடித்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Therimanal – தேரிமணல்”
Shopping Cart