, ,

தாகூர்

400

தேசிய கீதத்தை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர் என்றே அறிந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்திலும், புதிய இந்தியா உருவாக்கத்திலும் அவருடைய பங்களிப்பு எந்தளவுக்கு இருந்துள்ளது என நூலாசிரியர் இந்த நூலில் எடுத்துரைத்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா எவ்வாறு விடுபடுவது புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும். வழி நடத்துவது எவ்வாறு, வேற்றுமைகளில் ஒற்று மையை எவ்வாறு காண்பது .. என்று பலவகைகளில் தாகூர் சிந்தித்துள்ளார் என்பதையும், அதனால்தான் அவரை இந்தியாவின் மனசாட்சி என்று மகாத்மா காந்தியும், ஜவாஹர்லால் நேருவும் கூறினார்கள் என இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தாகூரின் முன்னோர்களின் வரலாறு, ரவீந்திரநாத் இளம்பருவம் முதல் இறுதிக் காலம் வரையில் 42 தலைப்புகளில் எளிய தமிழில் நூல் எழுதப்பட்டுள்ளது.
‘கவிஞர், பாடலாசிரியர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், நடிகர், ஓவியர், கல்வியாளர், தத்துவஞானி, மனித நேயர், சர்வதேசவாதி, நாட்டுப் பற்றாளர், தீர்க்கதரிசி, வழிகாட்டி.. என அனைத்து வகையான செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியவர் தாகூர் என்று நூலைப் படிக்கப் படிக்கத் தெரிவாகிறது. விரிவான தரவுகளோடும், மேற்கோள்களோடும் தாகூர் குறித்து வெளிவந்த நூல்களில் இதுவும் சேர்கிறது. தேசப்பற்றாளர்க வாசிக்கத் தவறவிடக்கூடாத நூல் இது.

தாகூர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாகூர்”
Shopping Cart