, ,

திருமுறையுள் கருத்தும் கதையும்

380

திருமுறையுள் கருத்தும் கதையும்

ஒரு கருத்தைக் கதையோடு சொல்லி விளங்க வைப்பது என்பது குழந்தைப் பருவப் பயிற்சி. ஆனால், அது எந்த வயதுக்கும் பொருந்தும் என்பது தான் யதார்த்தம். அந்த உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் புத்தக ஆசிரியர். திருமுறைப் பாடல்கள் சுருக்கமாகச் சொன்னவற்றை சுவையாக விளக்கிய பாங்கு புத்தகத்தின் 30 அத்தியாயங்களிலும் விரவிப் பரவியுள்ளது.

‘சுந்தரர் அவினாசி அப்பனைப் பாட, தாமரைத் தடாகத்திலிருந்து முதலை, தானும் அப்பாடலைக் கேட்கும் ஆவலில் எட்டிப்பார்த்தது, ‘நுால் நுாற்கும் ராட்டினத்தில் சிலந்தி வலை பின்னியது, ‘வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லை, சடையப்ப வள்ளல் நுாற்றில் ஒருவர் அல்ல, ஆயிரத்தில் ஒருவர்’ என்பன போன்ற நயங்களுக்குப் பஞ்சமில்லை.

கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாடல் என்று மேற்கோள்கள் காட்டி, தான் சொல்ல வந்ததற்குத் தொடர்புடைய பிற நுால்கள் மீதான தனக்குள்ள புலமையை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்துகிறார்.

திருமுறைப் பாடல்களை விளக்கும் சாக்கில் பல சிவத்தலங்களுக்கும் அழைத்துச் சென்று பரவசப்படுத்துகிறார். ‘கனிக்கும், கரும்புக்கும் எட்டா இனியவன்’ என்பன போன்ற அத்தியாயத் தலைப்புகள், நம்மை புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல், நம் கவனத்தைத் திசை திருப்ப விடாமல் செய்கின்றன என்பதை படித்து அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருமுறையுள் கருத்தும் கதையும்”
Shopping Cart